God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




130
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும்
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும்

கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும்

எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வை பாதுகாத்தருளும்
இயேசுவே பாதையில் சேதங்கள் அணுகாது
பரனே என் வாழ்வில் தீபமாய் வாரும்


© www.myjesus.in . 2014