God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




152
கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு அல்லேலுயா
புகழ்ந்து பாடு அல்லேலுயா
சேர்ந்து பாடு அல்லேலுயா
துதித்து பாடு அல்லேலுயா
களித்துப் பாடு அல்லேலுயா
அல்லேலுயா ஆமேன்
அல்லேலுயா (18)

வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

செங்கடலைப் பிரித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளை அழித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தாழ்வில் நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது


© www.myjesus.in . 2014