God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




170
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

ஆதி சருவேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலை கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு

பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சர்வாதிகாரனுக்கு
பக்தர் உப காரனுக்கு பாம குமாரனுக்கு


© www.myjesus.in . 2014