God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




283
பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காய்
நான் லக்கை நோக்கி ஓடுகிறேன்

ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

லாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே னிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

மணவாளன் இயேசு ராஜாவை நான்
காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசையெல்லாம் என் இயேசு தானே
அவர் பொன் முகம் நான் பார்க்கணுமே



© www.myjesus.in . 2014