God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




44
கூடாதது ஒன்றுமில்லையே (4)
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே

மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே

கடலின் மேல் நடந்தாரே
கடும் புயல் அடக்கினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே


© www.myjesus.in . 2014