God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




53
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப்போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதம் அங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ (3)
சொல் என் மனமே

ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அவர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ (3)
சொல் என் மனமே

சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளை சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ (3)
சொல் என் மனமே

ஜீவ விருட்சத்தின் கனி தின்று
ஜீவ நதி நீரை என்றும் குடித்து
ஜீவ கிரீடமும் சிரசில் சூடி
நீ அங்கிருப்பாயோ (3)
சொல் என் மனமே



© www.myjesus.in . 2014