God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




59
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னைவெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் தேவன் நடுவரே

நோயாளியாய் நான் இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி
நோகடிப்பார்கள்

கடனளியாய் நான் இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி
நோகடிப்பார்கள்

பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று சொல்லி
பரிதபிப்பார்கள்

அனாதையாய் நான் இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று சொல்லி
அலைய வைப்பார்கள்


© www.myjesus.in . 2014