God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




63
அன்பின் தேவன் இயேசு
உன்னை அழைக்கிறார்
அவரின் குரலை கேட்ட பின்னும்
கலக்கம் ஏன்

கல்வாரியின் மேட்டினில்
கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கம் ஏன்
கர்த்தர் இயேசு அழைக்கிறார்

உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க இயேசு துடிக்கிறார்

மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்

வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் இயேசுபார்

வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருக்குதோ
மரணம் வென்ற இயேசு பார்


© www.myjesus.in . 2014