God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
66
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடமுண்டு
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரனில்லை
இராஜாதிராஜா இயேசு
என்றென்றும் நடத்திடுவார்
பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதிராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்
இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதி பாடலுண்டு
இராஜாதிராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்
|