God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




95
யேசுவே கிருபாசனப்பதியே கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்
ஏசுவே கிருபாசனப்பதியே

காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவு
கண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா
நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்து
நித்தனே எனைத் திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி

பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும்
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து முற்றும் முடியக்கண் பார்த்து

பொல்லா உலகம் அதில் நல்லார் எவருமில்லை
புண்ணியனே உன் சரணம் நண்ணி அண்டினேன்
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து


© www.myjesus.in . 2014